Home > DISTRICT-NEWS, Krishnagiri > திறந்த நிலையில் தின்பண்டம்: பறிமுதல் செய்து அழிப்பு

திறந்த நிலையில் தின்பண்டம்: பறிமுதல் செய்து அழிப்பு

12,January, 2016

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், திறந்த நிலையில் வைத்திருந்த, தின்பண்டங்களை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் குழுவினர், கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் சுற்றுப்புறங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் கண்ணாடி பெட்டி இல்லாமல் திறந்த நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த, வடை, போண்டா, பஜ்ஜி, முறுக்கு, சிப்ஸ், சில்லி சிக்கன் போன்ற தின்பண்டங்களை கைப்பற்றி அழித்தனர். திறந்த நிலையில் பணியாரம் சுட்டு வந்த அனைத்து கடைகளும் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், கண்ணாடி பெட்டியில் வைக்காமல், திறந்த நிலையில் தொங்கவிடப்பட்ட கோழி மற்றும் ஆட்டிறைச்சி, 30 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதேபோல் பழையபேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் ஆய்வு செய்தனர். அப்போது, ஐஸ் பெட்டியில் கெட்டுப்போன மீன், 20 கிலோ விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், மீன்களை தரையில் கொட்டி வைக்காமல், கண்ணாடி பெட்டியில் பாதுகாப்பாக வைக்கவும், சரியான முறையில் சுத்தம் செய்யவும், கடைகளுக்குள் வைத்து மீன் இறைச்சிகளை விற்பனை செய்யுமாறும், கடைகளுக்கு முன்பாக மீன் இறைச்சி மற்றும் தண்ணீர் தேங்காமல் இருக்குமாறு, கடைகளை சரிசெய்ய வேண்டும் என கால அவகாசம் கொடுத்து, நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யும் அனைத்து கடை உரிமையாளர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி எச்சரித்துள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri
%d bloggers like this: