Home > DISTRICT-NEWS, Villupuram > சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்த ஓட்டலுக்கு சீல் வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை

சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்த ஓட்டலுக்கு சீல் வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை

14,January, 2016

 

மயிலம்

சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்ததாக ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கலெக்டரிடம் புகார்

விழுப்புரம்–சென்னை தேசிய நெடுஞ்சலையில் மயிலம் அருகே ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு சுகாதாரமற்ற நிலையில் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், குளிர்பானம், தின்பண்டங்கள் என்று அனைத்தும் பொருட்களும் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட கலெக்டர் லட்சுமிக்கு புகார் வந்தது.

சீல் வைப்பு

இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நிலைய அலுவலர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பழனிச்சாமி, ரவிக்குமார், கதிரவன் ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த உணவு விடுதியை பூட்டி சீல் வைத்தனர். மேலும் காலாவதியான 351 குளிர்பான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழமல் இருக்கும் வகையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

HIGHWAY HOTEL RANGANAYAKI

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: