Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

15,January, 2016

15_01_2016_102_013_001

கடலுார்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் வெல்லம், ஜவ்வரிசி, அரிசி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் பல்பொருள் விற்பனை அங்காடி.

மளிகைக் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு செய்தார்.

அப்போது தரம் குறைவான பொருட்களை மாதிரி எடுத்து சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் போது உணவு அலுவலர்கள் நத்தகுமார், நல்லதம்பி, செந்தில்,ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
%d bloggers like this: