Home > DISTRICT-NEWS, Villupuram > திண்டிவனம் நகரில் அதிகாரி திடீர் ஆய்வு

திண்டிவனம் நகரில் அதிகாரி திடீர் ஆய்வு

22,January, 2016

திண்டிவனம்: திண்டிவனத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.

திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை, திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள ஒரு டீக்கடையில், தடை செய்யப்பட்ட 5 கிலோ பான்பராக் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், திண்டிவனம்-செஞ்சி ரோட்டிலுள்ள ஒரு டீக்கடையில் 5 கிலோ மதிப்புள்ள கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

22_01_2016_110_026

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: