Home > DISTRICT-NEWS, Sivaganga > உஷார் ! : காரைக்குடியில் போலி டீத்தூள் சப்ளை : லாபத்தை குறிக்கோளாக செயல்படும் கடைகள்

உஷார் ! : காரைக்குடியில் போலி டீத்தூள் சப்ளை : லாபத்தை குறிக்கோளாக செயல்படும் கடைகள்

1,February, 2016

காரைக்குடி: காரைக்குடியில் சில டீக்கடை களில் வாங்கப்படும் 60 சதவீத டீத்தூள் போலியானது என தெரிய வந்துள்ளதால், டீக்கடைக் காரர்கள் மக்களின் உடல் நலன் பாதிக்காத டீத்தூளை வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்குடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 3600 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு, கோடவுனுக்கு சீல் வைக்கப்பட்டது. கலப்பட டீத்தூள் விற்பனையில் ஈடுபட்டவர், உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் கூறும் போது, ""காரைக்குடியில் கலப்பட டீத்தூள் விற்பனையில் நான் சின்ன வியாபாரி. பெரிய அளவில் பலர் ஈடுபடுகின்றனர். சில டீக்கடைக் காரர்களை பொறுத்தவரை கலர் அதிகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதனால், கலப்படம் இன்றி டீத்தூளை விற்க முடியாத நிலை உள்ளது, என்றார்.
கலப்பட பொருட்கள் கோவை மற்றும் பொள்ளாச்சியிலிருந்து கொரியர் மூலம் இங்கு வருகிறது. மரத்தூள், புளியங்கொட்டை தூள், அரைத்த முந்திரி கொட்டை தூள், செயற்கை நிறமேற்றி ஆகியவை, டீத்தூளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.
இது உணவு பாதுகாப்பு அலு வலர்கள் மட்டுமன்றி போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மற்ற பகுதியை காட்டிலும் காரைக் குடியில் டீக்கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் ஒரு டீ ரூ.5, 6. காரைக்குடியில் ரூ.8, 10. இங்கு இருப்பதை விட கிராமப் புறங்களில் டீயின் சுவையும், தரமும் அதிகம். பெயரளவில் முன்னணி பிராண்ட் டீத்தூள்களை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்து விட்டு, கலப்பட டீத்தூளை கடை உள்ளே பதுக்கி வைத்து இரண்டையும் கலந்து டீ போட்டு தருகின்றனர்.
பசுமை பாதுகாப்பு மக்கள் இயக்க செயலாளர் பால சுப்பிர மணியன்: மெல்ல கொல்லும் விஷ மாக உணவு கலப்படம் மாறி வரு கிறது. காசு வாங்கும் கடை உரிமை யாளர்கள், மக்களின் நலனில் அக் கறை கொள்வதில்லை. எந்த பொருள் விரைவாக விற்பனை ஆகிறதோ அதில் எல்லாம் கலப்படம் மிகுந் துள்ளது. காரைக்குடியின் பெரும் பாலான டீக்கடைகளில் கலப் படமே மிகுந்துள்ளது. டீ குடித்த வுடன் ஒருவித துர்நாற்றமும், வாந்தி எடுக்கும் நிலையும் ஏற் படுகிறது. தொடர் ஆய்வு மேற்கொண்டு கலப்படங்களை கண்டறிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga
%d bloggers like this: