Home > DISTRICT-NEWS, Erode > உணவு பாதுகாப்பு சட்டத்தில் பதிவு: இன்னும் 6,000 நிறுவனங்கள் பாக்கி

உணவு பாதுகாப்பு சட்டத்தில் பதிவு: இன்னும் 6,000 நிறுவனங்கள் பாக்கி

3,February, 2016

ஈரோடு: உணவு பாதுகாப்பு சட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் இன்னும், 6,000 நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கருணாநிதி கூறியதாவது: உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில், பதிவு செய்ய வேண்டிய, லைசென்ஸ் பெற வேண்டிய, 19,000 நிறுவனங்கள் உள்ளன. இதில், 3,000 நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்றுள்ளன. 11,000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று, பிப்., 14ம் தேதி வரை பதிவு மற்றும் லைசென்ஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை, 6,000 நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை. எங்கள் விதிகளுக்கு உட்பட்டு கடைகள், நிறுவனங்கள், இருப்பு வைக்கும் குடோன் போன்றவைகளில் சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை, வெல்லத்தில் ?ஹட்ரோஸ் அதிகமாக கலந்து விற்ற, 6 பேர் மீது குற்றவியல் வழக்கு தொடுத்துள்ளோம். ஆனூர் பால் நிறுவனம் மீது, 3 வழக்கு, போலி டீத்தூள் தயாரித்து விற்றதாக, 6 வழக்கு என, டி.ஆர்.ஓ., விசாரணையில், 30 வழக்குகளும், நீதிமன்ற விசாரணையில், 5 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஜவ்வரிசி கலப்படம் உள்ளதா என்பது குறித்து, 3 ஆலைகளில் இருந்து மாதிரிகளை எடுத்து அனுப்பி உள்ளோம். புரோட்டாக் கடை நிர்வாகி உட்பட இருவருக்கு, சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளோம். மேலும், 10 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி, கமிஷனருக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Erode
%d bloggers like this: