Home > NEWS > தரமற்ற உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரிப்பு: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு முறைகள்

தரமற்ற உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரிப்பு: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு முறைகள்

17,February, 2016

புதுடெல்லி: தரமற்ற உணவு தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் போன்றவற்றில், அவை நீண்ட நாட்களுக்கு கெடாத வகையில் சில வகை ரசாயனங்கள்  சேர்க்கப்படுகின்றன. இதுபோல், சுவை மற்றும் அழகூட்டுவதற்காக நிறமிகளும் சேர்க்கப்படுகின்றன. இவை உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  இருக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தர விதிகளை உருவாக்கியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சபை (அசோசாம்) சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய  ஆணைய தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் பேசியதாவது:  நாட்டில் 100க்கு 6 நிறுவனங்களே பதிவு பெற்று உரிமத்துடன் தரமான உணவு  பொருள்களை தயாரித்து வருகின்றன. உணவு தயாரிப்பு, பதப்படுத்துதல், உணவு பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு விநியோகம்  செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் அல்லது பொது நிறுவனங்கள் எங்கள் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். உரிமம் இல்லாமல்  உணவுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் அவை ஈடுபட முடியாது.
உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உரிமம் பெறும் முறை கடந்த 2011ம் ஆண்டுமுதல் அமலுக்கு வந்தது. இதற்கான கால கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டும் பல  நிறுவனங்கள் உரிமம் பெறவில்லை. எங்களிடம் 33 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துகொண்டுள்ளன. இது 5 சதவீதம் ஆகும். இது 10 சதவீத  அளவை கூட எட்டமுடியவில்லை. நாட்டில் 5 கோடி அளவுக்கு உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. தரமற்ற உணவு தயாரிப்பு நிறுவனங்கள்  அதிகரிப்பது கவலைக்குரியது. உரிமம் பெறுவதற்கான காலக்கெடு இந்த ஆண்டு மே 4 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில உணவு  தயாரிப்புகளுக்கு தர கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்கி வருகிறோம். இவை ஓரிரு மாதங்களில் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Categories: NEWS
%d bloggers like this: