Home > DISTRICT-NEWS, Sivaganga > உணவு பொருட்களில் விலைப்பட்டியல் அவசியம் : கலெக்டர் அறிவுறுத்தல்

உணவு பொருட்களில் விலைப்பட்டியல் அவசியம் : கலெக்டர் அறிவுறுத்தல்

1,March, 2016

சிவகங்கை: ""உணவு பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, விலை, எடை போன்றவற்றை வியாபாரிகள் கண்டிப்பாக இடம் பெற செய்ய வேண்டும்,” என கலெக்டர் மலர்விழி பேசினார்.

சிவகங்கையில், வர்த்தகர்களுக்கு <உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஆர்.விவேகானந்தன் வரவேற்றார். டி.ஆர்.ஓ., இளங்கோ முன்னிலை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், காளைப்பாண்டியன், தியாகராஜன் விளக்கம் அளித்தனர். கலெக்டர் பேசுகையில்,மக்கள் உணவு பொருட்களை நம்பித்தான் வாங்குகின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வியாபாரிகள் விற்பனை செய்யும் உணவு பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதி, எடை,விலை போன்றவற்றை சரியாக குறிப்பிட வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் முக்கிய உணவான பாலில் கலப்படம் இன்றி, விற்பனை செய்ய வேண்டும்.

சுத்தமான, சுகாதாரமான முறையில் பொருட்களை விற்பனை செய்து, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். வியாபார, தயாரிப்பு நிறுவனம், அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் தங்களது நிறுவனத்தை பதிவு செய்வது அவசியம். இதற்கான கடைசி தேதி பிப்.,4 என இருந்தது. வியாபாரிகள் தங்களது நிறுவனத்தை முழுமையாக உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்ய வசதியாக, கால அவகாசத்தை மே.,4ம் தேதி வரை நீட்டித்துள்ளனர், என்றார். உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga
%d bloggers like this: