Home > DISTRICT-NEWS, Villupuram > புகையிலைப் பொருளை விற்பனை செய்த கடைக்கு சீல்

புகையிலைப் பொருளை விற்பனை செய்த கடைக்கு சீல்

1,March, 2016

திருக்கோவிலூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

திருக்கோவிலூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் வரலட்சுமி திருக்கோவிலூருக்கு திங்கள்கிழமை வந்தார்.  முன்னதாக, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டார். அப்போது ஒரு கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் வரலட்சுமி அங்கிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ததுடன், சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தார்.  மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.   உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கே.சரவணன், இப்ராஹிம், கணேசன், கதிரவன், ஜெயராஜ், தருமர், காவல் துறை உதவி ஆய்வாளர் குணபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: