Home > DISTRICT-NEWS, Villupuram > கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு: தரமற்ற பொருள்கள் பறிமுதல்

கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு: தரமற்ற பொருள்கள் பறிமுதல்

2,March, 2016

வானூர், கிளியனூர் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், தரமற்ற பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, வட்டார அதிகாரிகள் சந்திரசேகர், சமரேசன், கதிரவன், மோகன், முருகன், சரவணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வானூர், கிளியனூர், திருச்சிற்றம்பலம் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கிளியனூர் மளிகைக் கடை ஒன்றில் ஆய்வு செய்தபோது, ஐயோடின் இல்லாத 5 மூட்டை உப்பும், தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா புகையிலைப் பொருள்களும், காலாவதியான துவரம் பருப்பு, கருகிப் போன பூண்டு, காலாவதி, உற்பத்தி தேதி குறித்த ஸ்டிக்கர் இல்லாத பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

கிளியனூர் பழைமையான உணவகத்தில் ஆய்வு செய்தபோது, மோசமான சமையலறை, பாத்திரங்கள், பழைய பரோட்டாக்களை பறிமுதல் செய்தனர். வானூர், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதி டீ கடையில் ஆய்வு செய்தபோது, தண்ணீரில் புழு இருந்தது, கடையிலிருந்த தரமற்ற சர்க்கரை, கலப்பட டீ துளை வெளியே கொண்டு வந்து கொட்டினர்.

இதேபோல, அங்குள்ள மளிகைக் கடைகளில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பான்பராக், பான்மசாலா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

அதிகாரிகள் ஆய்வின்போது, கிளியனூர், வானூர், திருச்சிற்றம்பலம் பகுதி கடைக்காரர்கள் பலர் கடைகளை  மூடிவிட்டு தப்பினர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: