Home > NEWS > உணவு பாதுகாப்பு சட்டம் வணிகர்கள் வலியுறுத்தல்

உணவு பாதுகாப்பு சட்டம் வணிகர்கள் வலியுறுத்தல்

17,March, 2016

மதுரையில் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். சங்கம் சார்பில் மே 5ல் கோவில்பட்டியில் வணிகர்களின் மாநாடு நடத்துவது, உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி., சட்டத்தை வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமல்படுத்துவது, பணம் கொண்டு செல்லும் வியாபாரிகளை தேர்தல் கமிஷன் எளிமையாக சோதனை செய்வது போன்றவைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, பொதுச் செயலர் மோகன், பொருளாளர் கோவிந்த

ராஜூலு, மாவட்ட செயலர்கள் பாண்டியன், பழனிச்சாமி, அழகேசன் பங்கேற்றனர்.

பொருளாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.

Categories: NEWS
%d bloggers like this: