Home > NEWS > கரும்பு சாறு, பதநீரில் சாக்கரீன் கலப்படம் : வயிற்று போக்கு ஏற்பட வாய்ப்பு

கரும்பு சாறு, பதநீரில் சாக்கரீன் கலப்படம் : வயிற்று போக்கு ஏற்பட வாய்ப்பு

21,March, 2016

திண்டுக்கல்லில் சாக்கரீன் கலந்த கரும்புச்சாறு, பதநீர் விற்பனை செய்யப்படுவதால் வயிற்று போக்கு, வாந்தி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோடை வெயில் வாட்டி வதைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்களை விரும்பி குடிக்கின்றனர். இதனால் பழ ஜூஸ், கரும்புச்சாறு, பதநீர், இளநீர், கூல் டிரிங்க்ஸ் விற்பனை அதிகரித்து உள்ளது.

சில பழக்கடைகளில் அழுகிய பழங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட பழ ஜூஸ்கள், பழ சாலட்டுகள் விற்பனையாகி வருகின்றன. இதே போல பதநீரி<லும், கரும்பு சாறிலும் கலப்படம் செய்தும் விற்று வருகின்றனர்.

சாக்கரீன் கலப்படம்: அனைவரும் விரும்பி அருந்தும் பதநீருடன் நீரையும், சாக்கரீன் பவுடரையும் கலந்து விற்பனை செய்கின்றனர். இதே போல் கரும்பு சாறிலும் கலந்து விற்கப்படுகிறது. இதனை வாங்கி அருந்துபவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. சில வியாபாரிகள் பணத்திற்காக இதை கலப்பதால், மக்களுக்கு இலவசமாய் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்: குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். சுவைக்காகவும் வண்ணத்திற்காகவும் ரசாயன பவுடர்களை கலப்படம் செய்ய கூடாது. சாக்கரீன் பவுடரை கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Categories: NEWS
%d bloggers like this: