Home > NEWS > தேவாரத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை கனஜோர்

தேவாரத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை கனஜோர்

28,March, 2016

தேவாரம், :  தேவாரத்தில் காலாவதியான உணவுப் பொருட்களின் விற்பனை கனஜோராக நடக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தேவாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தம்மிநாயக்கன்பட்டி, தே.மீனாட்சிபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைச்சேரி கிராமங்களைச் சேர்ந்தோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தினந்தோறும் தேவாரம் வந்து செல்கின்றனர். இங்குள்ள பலசரக்கு கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில், காலாவதியான உணவுப் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை, காலாவதியான குளிர்பானங்கள், பலசரக்கு கடைகளில் எண்ணெய், டால்டா, மசால்பொடி என காலாவதியான பொருட்களை அதிகளவில் விற்பனை செய்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய உணவுத்தர பாதுகாப்பு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. உள்ளூர் பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. காலாவதியான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேவாரம் நகரில் உணவுத்தர பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி தரமான பொருட்களின் விற்பனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்  கூறுகையில், ‘தேவாரத்தில் காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதிகமான அளவில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குளிர்பானங்கள், உணவுப்பொருட்களின் விற்பனை அதிகமாக நடக்கிறது. ஒதுக்குப்புறமான ஊராக இருப்பதால், யாரும் கண்டுகொள்வதில்லை. காலாவதியான பொருட்களை விற்போர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Categories: NEWS
  1. 28,March, 2016 at 1:46 pm

    Instead of publishing as news, they can bring to the notice of FSDA & Local body to act on the points mentioned.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: