Home > NEWS > உணவு பதப்படுத்துதல் பயிற்சி

உணவு பதப்படுத்துதல் பயிற்சி

4,April, 2016

புதுச்சேரி:மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மற்றும் வில்லியனுார் சேவாலயம் சுகாதார அறிவியல் நிறுவனம் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது.சேவாலயம் சுகாதார அறிவியல் நிறுவனத்தின் மாணவிகள், மகளிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழங்கள், காய்கறிகள், உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சேவாலயம் நிறுவனர் சங்கர் வாழ்த்திப் பேசினார்.உணவு மற்றும் ஊட்டச்சத்து செயல்விளக்க அதிகாரி ஜெயபால், பயிற்சியில் பங்கேற்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கினார். சேவாலயம் சுகாதார அறிவியல் நிறுவனத்தின் ஆசிரியை லலிதா நன்றி கூறினார்.

Categories: NEWS
%d bloggers like this: