Home > NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

14,April, 2016

வடமதுரை:அய்யலுாரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

மாவட்ட நியமன அலுவலர் சாம்இளங்கோ, வடமதுரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர்சாதிக் மற்றும் துறை ஊழியர்கள் நேற்று காலை அய்யலுார் வந்தனர். இங்கு ஐஸ் தயாரிப்பு கம்பெனிகள், குளிர்பான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

ஐஸ் கம்பெனிகளில் தரமற்ற கலர் பொடி, காலாவதியான மூலப் பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். குளிர்பான கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான குளிர்பான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இக்கடைகளில் அழுகிய எலுமிச்சை பழங்களையும், துருப்பிடித்த கத்திகளையும் பயன்படுத்த கூடாது. சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்களை தயாரிப்போருக்கு கைகளில் புண்கள் இருக்க கூடாது. முறையான மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளோம். இதனை மீறி செயல்படுவோர் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Categories: NEWS
%d bloggers like this: