Home > NEWS > கோவில்பட்டி வணிகர் தின மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும் : விக்கிரமராஜா சொல்கிறார்

கோவில்பட்டி வணிகர் தின மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும் : விக்கிரமராஜா சொல்கிறார்

14,April, 2016

கோவில்பட்டியில் நடைபெற உள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வணிகர்கள் தின மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும் என, வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

 
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து 500 வணிக சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு தமிழகத்தில் வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமையும். மே 4 ல் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட நீட்டிப்பு முடிவுக்கு வருகிறது. மத்திய அரசு இந்த சட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிக வருமானம் கிடைக்கும் இடத்திற்கு, பணம் செலவு செய்து பணி மாறுதல் பெற்று வருகின்றனர். சரக்கு வரி, சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் வணிகர்களை பாதித்து வருகிறது.
 
இது குறித்து மாநாட்டில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து மாநாட்டுக்குப்பின் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

Categories: NEWS
%d bloggers like this: