Home > DISTRICT-NEWS, Virudhunagar > தரமற்ற அசைவ உணவுகள் அழிப்பு

தரமற்ற அசைவ உணவுகள் அழிப்பு

14,April, 2016

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள உணவகங்கள், உணவு பொருள்கள் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற அசைவ உணவுகளை அதிகாரிகள் புதன்கிழமை அழித்தனர்.

ராஜபாளையம் நகரில் பகுதிகளில் உள்ள உணவகங்கள், பலசரக்கு கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 5க்கும் மேற்பட்ட உணவகங்களில் தரமற்ற நிலையில் இருந்த அசைவ உணவுகளை கண்டுபிடித்து பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர், சந்தை பகுதியில் உள்ள மாங்காய் விற்பனை நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். ஊறுகாய்க்கு பயன்படுத்தப்படும் மாங்காய்களில் எரிகற்கள் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த அதிகாரிகள் சில மாங்காய்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.  இதை தொடர்ந்து அங்கிருந்த பலசரக்கு விற்பனை நிலையங்களிலும் சோதனை நடைபெற்றது. உற்பத்தி நாள் மற்றும் காலாவதியான நாள் அச்சிடாமல் விற்பனை செய்த கடையின் உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

%d bloggers like this: