Home > DISTRICT-NEWS, Virudhunagar > தரமற்ற மல்லி வைத்திருந்த மளிகை கடை வியாபாரிக்கு அபராதம்

தரமற்ற மல்லி வைத்திருந்த மளிகை கடை வியாபாரிக்கு அபராதம்

17,April, 2016

சாத்தூர்,

சாத்தூர் நகர் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார். அப்போது சுதாகர் என்பவரது மளிகை கடையில் ஆய்வு செய்தபோது, சந்தேகத்தின்பேரில் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த முழு மல்லியை சோதனைக்காக மாதிரி எடுத்து நெல்லை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்படி வந்த ஆய்வறிக்கையில் அந்த முழுமல்லியில் உயிருள்ள மற்றும் இறந்த பூச்சிகள் இருப்பதாகவும், இது பாதுகாப்பது அற்றது மற்றும் தரம் குறைவானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆய்வறிக்கைபடி விற்பனையாளரான சுதாகர் மீது வழக்கு தொடர சென்னை உணவு பாதுகாப்பு ஆணையாளர் அனுமதி அளித்தார். இதைதொடர்ந்து சாத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கீதா, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் சுதாகருக்கு நீதிமன்றம் கலையும் வரை சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

%d bloggers like this: