Home > DISTRICT-NEWS, Tiruvannamalai > உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

19,April, 2016

செங்கம் பகுதியில் தரமற்ற தண்ணீர், குளிர்பானம் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.

  செங்கம் மற்றும் சுற்று வட்டப் பகுதியில் கடைகளில் தரமற்ற குளிர்பானம், தண்ணீர் பாட்டில், வாட்டர் பாக்கெட், குடிசைத் தொழில் மூலம் தயார் செய்யும் உணவுப் பொருள்களுக்கு தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்வதாகவும், மேலும், தடை செய்யப்பட்ட ஆன்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களும் கடைகளில் கிடைப்பதாக பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு புகார்கள் சென்றுள்ளன.

அதன் அடிப்படையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் பாண்டியன் தலைமையில் செங்கம் பகுதியில் உள்ள துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், போளூர் சாலை பங்க் கடை, குளிர் பானக்கடை ஆகிய கடைகளுக்கு சென்று குளிர் பானங்கள், தண்ணீர் பாட்டல், வாட்டர் பாக்கெட்கள் தரமாக உள்ளதா, அதில் தயாரிக்கும் தேதி காலாவதியாகும் தேதி உள்ளதா என ஆய்வு செய்தார்.

மேலும் குடிசைத் தொழில் மூலம் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் பொருள்களில் கட்டாயம் தயாரிப்பு தேதி காலாவதியாக தேதி இருக்க வேண்டும் என எச்சரித்தார். 

அதைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

%d bloggers like this: