Home > DISTRICT-NEWS, Tiruchirappalli > காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் பறிமுதல்

காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் பறிமுதல்

21,April, 2016

 

திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபு மேற்பார்வையில் மண்ணச்சநல்லூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கென்னடி தலைமையில் அலுவலர்கள் சமயபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் ஸ்வீட் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் காலாவதியான குளிர்பானங்கள், குடிநீர் பாக்கெட்டுகள், தடை செய்யப்பட்ட நிறமிகள் கலந்த ஸ்வீட் வகைகள், கலப்படமான டீ தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 120 கிலோ எடையுடைய பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 12 ஆயிரம் ரூபாய் ஆகும். பின்னர் காலாவதியான பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கண்ணனூர் பேரூராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று பேரூராட்சி பணியாளர்கள் அழித்தனர்.

%d bloggers like this: