Home > NEWS > கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

22,April, 2016

மானாமதுரையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்களை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை பேரூராட்சி பகுதியில் சுந்தரபுரம், பழைய பேருந்து நிலையம், வாரச் சந்தை உள்ளிட்ட இடங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் மங்களேஸ்வரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துராமலிங்கம், சுரேஷ். ராஜேஷ் ஆகியோர் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள், காலாவதியான குளிர்பானங்கள், தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை ஆகியவற்றைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

Categories: NEWS
%d bloggers like this: