Home > DISTRICT-NEWS, Theni > காலாவதியான பால், குளிர்பானங்கள் விற்ற கடைக்கு சீல்வைப்பு

காலாவதியான பால், குளிர்பானங்கள் விற்ற கடைக்கு சீல்வைப்பு

22,April, 2016

போடியில் காலாவதியான பால் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

போடி:

தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் குளிர்பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. எனவே பல இடங்களில் காலாவதியான குளிர்பானங்களையும் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

போடி மீனாட்சி தியேட்டர் அருகே உள்ள ஒரு கடையில் காலாவதியான பால், தயிர், நெய் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போடி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை தேனி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகுணா தலைமையில் தேனி புறநகர் உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன்தாஸ், போடி உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது காலாவதியான பால், தயிர், நெய் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் அங்கிருந்த காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.

Categories: DISTRICT-NEWS, Theni
  1. 23,April, 2016 at 7:43 am

    Reblogged this on PesPro.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: