Home > DISTRICT-NEWS, Theni > காலாவதி பொருட்கள் பறிமுதல்

காலாவதி பொருட்கள் பறிமுதல்

22,April, 2016

போடியில் காலாவதியான பால், ஆவின் தயிர் பாக்கெட்டுகள், குளிர்பானங்களை உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தார்.போடி மீனாட்சி தியேட்டர் லைனில் பெட்டி கடை வைத்திருப்பவர் செல்வக்குமார், 40. உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் , இவரது கடையில் சோதனை செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பால், ஆவின் தயிர்பாக்கெட், குளிர்பானங்களை பறிமுதல் செய்தார். பின்னர் அவை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் சுகுமார் உத்தரவுப்படி அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Theni
  1. 23,April, 2016 at 7:39 am

    Reblogged this on PesPro.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: