Home > DISTRICT-NEWS, Salem > ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

27,April, 2016

மேட்டூர் : மேச்சேரி அருகே, ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்லை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ெதாப்பூர் மற்றும் ஓமலூர் வட்டார பகுதி பறக்கும் படை அலுவலர் சம்பத் தலைமையிலான அதிகாரிகள், மேச்சேரியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, பெங்களூரில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து, மேச்சேரி போலீசில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த புகையிலை பொருட்கள், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: