Home > NEWS > நெல்லையில் 2000 கிலோ போதை பொருள்கள் அழிப்பு!

நெல்லையில் 2000 கிலோ போதை பொருள்கள் அழிப்பு!

28,April, 2016

திருநெல்வேலியில் ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ போதை பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை அழித்தனர்.

வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அவ்வாறு கொண்டு வரப்பட்ட போதை பொருள்களை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்கள் 56 மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அதனை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அழிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 

திருநெல்வேலி மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், காளிமுத்து, ரமேஷ், ரயில்வோ காவல் ஆய்வாளர் ஸ்ரீஜா ஆகியோர் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 2,125 கிலோ எடையுள்ள போதை பொருள்களை புதன்கிழமை பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி மலைப் பகுதியில் தீ வைத்து அழித்தனர்.

Categories: NEWS
%d bloggers like this: