Home > NEWS > உணவு பாதுகாப்பு உரிமம் பெற அவகாசம்மத்திய அரசிடம் வணிகர்கள் வலியுறுத்தல்

உணவு பாதுகாப்பு உரிமம் பெற அவகாசம்மத்திய அரசிடம் வணிகர்கள் வலியுறுத்தல்

4,May, 2016

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ், வணிகர்கள் உரிமம் பெறுவதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்ததால், காலத்திற்கேற்ப திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை, அவகாசம் வேண்டும்’ என, உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர்,
மத்திய சுகாதார அமைச்சர் நட்டாவிடம் வலியுறுத்தி உள்ளனர்.நுகர்வோருக்கு உணவு பொருட்கள் தரமானதாக கிடைக்க, மத்திய அரசு, 2006ல், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை இயற்றியது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, 2011ல் அமலுக்கு வந்தது. அதன்படி, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்கள், உணவு பாதுகாப்பு துறையில்
பதிவு செய்ய வேண்டும்; அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர், உரிமம் பெற வேண்டும்.’இந்த விதிமுறைகளை, காலத்திற்கேற்ப திருத்த வேண்டும்’ என, வியாபாரிகள் கூறி வருகின்றனர். மத்திய அரசு, மே, 4 வரை அளித்த, மூன்று மாத அவகாசம், நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, ‘அவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும்’ என, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், டில்லியில், மத்திய சுகாதார அமைச்சர், ஜெ.பி.நட்டாவை சந்தித்து வலியுறுத்தினர்.

Categories: NEWS
%d bloggers like this: