Home > NEWS > குஜிலியம்பாறை பகுதியில் காலாவதி உணவு பொருள் விற்பனை கனஜோர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கவனிப்பார்களா?

குஜிலியம்பாறை பகுதியில் காலாவதி உணவு பொருள் விற்பனை கனஜோர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கவனிப்பார்களா?

4,May, 2016

குஜிலியம்பாறை, :    குஜிலியம்பாறையில் தொடர்ந்து காலாவதியான உணவு பொருட்கள் கனஜோராக விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை செய்யும் கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். குஜிலியம்பாறையில் மளிகை கடை, ஓட்டல்கள், குளிர்பான கடைகள், இறைச்சி கடைகள், காய்கனி கடைகள், பேக்கரி, மெடிக்கல்ஸ், பெட்டிக்கடைகள், டீ கடை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படுவதில் காலாவதியான உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் குஜிலியம்பாறையில் அதிகமாக உள்ள பெட்டிக்கடைகளில் விற்கப்படும் திண்பண்டங்கள் காலாவதியான நிலையில் உள்ளது. இதனை பொதுமக்களுக்கு விற்று விடுகின்றனர்.
நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உணவு பொருட்கள், பால், குடிநீர் ஆகியவற்றின் தரத்தை உறுதிப்படுத்த உணவு பாதுகாப்பு ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வோர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளிர்பான கடை மற்றும் பெட்டிக்கடைகளில் தண்ணீர் பாக்கெட் அதிகளவில் விற்பனையாகிறது. மேலும் குளிர்பான கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்டவைகள் தரமானதாக விற்பனை செய்ய வேண்டும் என்றும், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வோர் மீது மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: NEWS
  1. 5,May, 2016 at 6:19 am

    Reblogged this on PesPro.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: