Home > DISTRICT-NEWS, Erode > ஜவ்வரிசியில் கலப்படம்: கடைக்காரருக்கு அபராதம்

ஜவ்வரிசியில் கலப்படம்: கடைக்காரருக்கு அபராதம்

4,May, 2016

 

ஈரோடு: கலப்பட ஜவ்வரிசியை விற்ற, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளருக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா நன்செய் ஊத்துக்குளியில் அர்த்தநாரீஸ்வரர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது. இதன் உரிமையாளர் ஜெகன் முத்துராஜா. இங்கு மொடக்குறிச்சி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார். விற்பனைக்கு வைத்திருந்த ஜவ்வரிசி பொட்டலங்கள் மாதிரி, உணவு பகுப்பாய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஆப்டிக்கல் ஒயிட்னர் என்ற ரசாயன பொருள் கலக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண், 3ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கவிதா, கலப்படத்துடன் கூடிய, பாதுகாப்பற்ற, ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்ட ஜவ்வரிசி உணவு பொருளை விற்ற ஜெகன் முத்து ராஜாவுக்கு, ஒரு நாள் சிறை தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Categories: DISTRICT-NEWS, Erode
  1. 5,May, 2016 at 6:18 am

    Reblogged this on PesPro.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: