Home > DISTRICT-NEWS, Krishnagiri > சாலையோர கடைகளில் கலர்ப் பொடி கலந்த பிரியாணி!

சாலையோர கடைகளில் கலர்ப் பொடி கலந்த பிரியாணி!

9,June, 2016

Briyani

கிருஷ்ணகிரி நகரில் சாலையோரம் உள்ள பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ராயக்கோட்டை ரோடு, பெங்களூர் ரோடு, காந்தி ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் மற்றும் சிறிய கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, பல கடைகளில் விற்பனைக்கு தயாரித்து வைத்திருந்த பிரியாணியை அதிகாரிகள் சோதனை செய்தார்.

பல கடைகளில் அதிகளவில் பிரியாணியில் ரசாயன கலர் பொடிகள் தூவப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து குப்பையில் கெட்டினர்.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri
%d bloggers like this: