Home > DISTRICT-NEWS, Salem > போலி ‘டீ’ தூள் 10 கிலோ பறிமுதல்

போலி ‘டீ’ தூள் 10 கிலோ பறிமுதல்

9,June, 2016

ஆத்தூர்: ஆத்தூரில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், 10 கிலோ போலி ‘டீ’ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆத்தூர் அருகே, செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, கல்பகனூர் ஆகிய கிராம பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான ஆய்வாளர்கள், ‘டீ’ கடை, பேக்கரி கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, டீ கடைகளில் பயன்படுத்தப்பட்ட தரமில்லாத, 10 கிலோ போலி டீ தூள்களை பறிமுதல் செய்து, அழித்தனர். தவிர, அனுமதியின்றி விற்ற குட்கா, புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: