Home > NEWS > மளிகை, டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

மளிகை, டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

9,June, 2016

திருமருகல் வட்டாரத்தில் உள்ள மளிகை, டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
அதிகாரி ஆய்வு
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் அண்ணா மண்டபம், ஆதினக்குடி, போலகம் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகை கடைகள் மற்றும் டீக்கடைகளில் திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் திடீரென ஆய்வு செய்தார். போலகம் கடைத்தெருவில் உள்ள டீக்கடையில் ஆய்வு செய்த அவர், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே கலப்பட டீத்தூள் கண்டறிவது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.
அப்போது அவர் கூறிகையில், கலப்பட டீத்தூளில் போடப்பட்ட டீயை பருகுவதால் பசி எடுப்பது குறைந்து, சிறுநீரக கோளாறு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கலப்பட டீத்தூளை எளிதாக கண்டறிய டீத்தூளை சிறிதளவு எடுத்து குளிர்ந்த அல்லது சாதாரண நீரின் மீது தூவினால் சிவப்பு சாயம் உடன் இறங்குவதை காணலாம். எனவே கலப்பட டீத்தூள் பயன்படுத்துவதாக சந்தேகம் வந்தால் பொதுமக்கள் உடனே 9442214055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார் வரும்பட்சத்தில் உடன் உணவு மாதிரி எடுத்து பரிசோதித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Categories: NEWS
%d bloggers like this: