Home > DISTRICT-NEWS, Nagapattinam > நியாயவிலைக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

நியாயவிலைக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

17,June, 2016

நாகப்பட்டினத்தில் உள்ள நியாயவிலைக் கடை மற்றும் டாஸ்மாக் மதுபானக் கூடங்களை, நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

நியாயவிலைக் கடைகளில், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மீது மழை காரணமாக உண்டாகும் சாரல், ஈரம் ஆகியவற்றால் பாதிப்படைந்து, பூஞ்சைக் காளான் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.

எனவே, அவற்றை பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பொட்டலங்களில் உள்ள உணவுப் பொருள்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை கவனித்து விற்பனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

டாஸ்மாக் கடை மதுபானக் கூடங்களில், தயாரிப்பு விவரமில்லாத குளிர்ப் பானங்களை விற்பனை செய்யக் கூடாது. உணவு தயாரிப்பவர் தன் சுத்தம் பேண வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவை தூசி மற்றும் ஈக்கள் நெருங்காத வகையில் மூடி பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வின்போது உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஏ. ஆண்டனி பிரபு, கே.சதீஸ், ஆர். மகாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

  1. 18,June, 2016 at 8:37 am

    Advise should be followed by action if no improvement is there.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: