Home > DISTRICT-NEWS, Erode > கேன்டீன், உணவு விடுதி நடத்துவோர் உரிமம் பெற வேண்டியது கட்டாயம்

கேன்டீன், உணவு விடுதி நடத்துவோர் உரிமம் பெற வேண்டியது கட்டாயம்

20,June, 2016

ஈரோடு, : உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வரும் கேன்டீன்கள், விடுதி உணவகங்கள் ஆகியவற்றுக்கு உரிமம் பெற வேண்டியது கட்டாயமாகும். எனவே பாதுகாப்பான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் செயல்படும் கேன்டீன்கள், விடுதி உணவகங்கள், டெக்ஸ்டைல் மில்கள், மருத்துவமனைகள், மற்றும் இதர தொழிற்சாலைகளில் செயல்படும் உணகவங்கள், கேன்டீன்களுக்கு உடனடியாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் விண்ணப்பித்து உரிமம் பெற்று கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு–்ளளது.
இதற்காக ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகம், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பான விளக்கத்தை 0424-2223545 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும், dofsserd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Erode
%d bloggers like this: