Home > NEWS > பிரெட்களில் பொட்டாசியம் புரோமேட் சேர்க்க தடை

பிரெட்களில் பொட்டாசியம் புரோமேட் சேர்க்க தடை

20,June, 2016

புதுடில்லி: 38 வகை பிரெட்களில், 32ல், பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. இது புற்றுநோய் உண்டாக்கும் என , சி.எஸ்.இ., எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக கடந்த மே மாதம் தகவல் வெளியாயின. இந்நிலையில் பிரெட்களில் பொட்டாசியம் புரோமேட் சேர்த்தால் புற்றுநோய் உண்டாகும் என ,உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப். எஸ்.எஸ்.ஏ. ஐ) தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரெட்களில் பொட்டாசியம் புரோமேட் வேதிப்பொருள் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது.

Categories: NEWS
%d bloggers like this: