Home > DISTRICT-NEWS, Villupuram > 500 கிலோ புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிப்பு

500 கிலோ புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிப்பு

20,June, 2016

விழுப்புரம்: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

விழுப்புரம் நகரில் பாகர்ஷா வீதி, நேருஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விற் பனை கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையிலான குழுவினர்,

திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு அலுவலர் கள் சமரேசன், சங்கரலிங்கம், முருகன், கதிரவன், ரவிக்குமார், சரவணன் ஆகியோர் சோதனை நடத்தினர். இந்த ஆய்வில், நேருஜி ரோட்டில் உள்ள ஒரு கடையிலும், பாகர்ஷா வீதியில் உள்ள ஒரு கடையி

லும் அரசால் தடை செய்யப் பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பட்டானி, ரஸ்னா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, 500 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 20 கிலோ சாயம் ஏற்றப்பட்ட உணவு பொருட்களை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு கடைகளுக்கும், அதி காரிகள் ‘சீல்’ வைத்தனர். பின், புகையிலை பொருட்களை அதிகாரி கள், தீயிட்டு அழித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: