Home > NEWS > உணவுப் பாதுகாப்பு அறிக்கைகளை தீர ஆராய்ந்த பின் வெளியிட வேண்டும்’

உணவுப் பாதுகாப்பு அறிக்கைகளை தீர ஆராய்ந்த பின் வெளியிட வேண்டும்’

26,June, 2016

உணவுப் பொருள் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகளை தீர ஆராய்ந்த பின்னரே பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) தலைமைச் செயல் அதிகாரி பவன் அகர்வால் தெரிவித்தார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) – ஹிந்துஸ்தானி யுனிலீவர் ஏற்பாடு செய்திருந்த உணவு பாதுகாப்பு அறிவியல் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ரொட்டி வகை உணவுப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ.) கண்டறிந்தது.
அதையடுத்து, அந்த வேதிப்பொருளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இது வரவேற்கத்தக்கதுதான்.
எனினும், உணவுப் பொருள் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகளை பொத்தம் பொதுவாக வெளியிடாமல், தீர ஆராய்ந்த பின்னரே வெளியிட வேண்டும். ஏனெனில், அது போன்ற அறிவிப்புகள் பலதரப்பட்ட ஊடகங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத பீதியை உண்டாக்கும்.
ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ள அறிவியல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்க சி.எஸ்.இ.-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Categories: NEWS
%d bloggers like this: