Home > NEWS > ஆலங்குளத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆலங்குளத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

1,July, 2016

பாவூர்சத்திரம், :  ஆலங்குளத்தில் இருந்து காய்கறிகளுடன் கடத்த முயன்ற ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  பாவூர்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நெல்லை – தென்காசி சாலையில் கே.டி.சி.நகர் அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குளத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த லோடு ஆட்டோவை  பிடித்து விசாரித்தனர்.
ஆட்டோ  டிரைவர் ஆலங்குளத்தைச் சேர்ந்த சக்திகணேஷ்(40) என்பவர் முன்னுக்குபின் முரணான தகவல் அளித்தார் இதனால்  சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் காய்கறி மூடைகளின்  அடியில் பண்டல்களில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கீழப்பாவூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜநயினார், செங்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரராஜ், ஆலங்குளம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோரிடம் பிடிப்பட்ட ஆட்டோவை போலீசார் ஒப்படைத்தனர்.

Categories: NEWS
%d bloggers like this: