Home > NEWS > சுகாதாரபாதுகாப்பு இல்லாமல் மீன்கள் விற்பனை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எதிர்பார்ப்பு

சுகாதாரபாதுகாப்பு இல்லாமல் மீன்கள் விற்பனை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எதிர்பார்ப்பு

1,July, 2016

சுகாதார   பாதுகாப்பு  இல்லாமல்  விற்கப்படும்  மீன்களை  கணிக்கணிக்க  சுகாதாரத்துறை  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்கவேண்டுமென  சமூக  ஆர்வலர்கள்  கோரிக்கை  வைக்கின்றனர் .

       அதிக  சுவைக்காகவும் , அதிக  லாபத்திற்காகவும்  உணவு  பொருட்களில்  கலப்படங்கள்  சேர்ப்பது  முழுமையாக  கட்டுபடுத்த  முடியாத  நிலையே மாவட்டத்தில்  காணப்படுகிறது .உணவு    பாதுகாப்பு  துறை  அதிகாரிகள்   நடத்தப்படும்  சோதனைகள்  மேற்கொள்ளும்  நடவடிக்கைகள்  குறிப்பிட்ட  அளவில் பலன்  தராத  நிலையே  காணப்படுகிறது . பாக்கட்  பொருட்களில்  உற்பத்தி  நாட்கள்  பார்த்து  நடவடிக்கை  எடுக்கும்  அதிகாரிகள்  அனைத்து  உணவு  பொருட்களும்  பாதுகாப்பாக விற்கப்படுகிறதா  என்ற  முறையான  கண்காணிப்பு  தேவை  என்கிறது  சமூக  ஆர்வலர்கள் .

    இதுபோன்று   மாவட்டத்தில்   மீன்   விற்பனைக்கு  எந்தவித  கண்காணிப்பும்  அதிகாரிகள்  மேற்கொள்வதில்லை  என்ற  குற்றச்சாட்டு  பரவலாக  பேசப்படுகிறது .இதுகுறித்து  சமூக  ஆர்வலர்  ஒருவர்  கூறும்போது :  குமரிமாவட்ட    மக்கள்  விரும்பிசாப்பிடும்  உணவு  வகைகளில்  ஒன்றாக  மீன்  உள்ளது. சத்தான  மீன்  உணவு  கலப்படம்  சேர்க்கப்பட்டால்  உடம்பிற்கு  மிகுந்த  ஆபத்தையும்  உருவாக்கும் .சாதாரணமாக  மாவட்டத்தில்  மீன்  வியாபாரத்தை  கூடுதலாக  அதிகாரிகள்  கண்காணிப்பதில்லை .இதனால்  மீன்  அதிக  நாட்கள்  கெட்டுப்போகாமல்  பாதுகாக்க  ரசாயன  பொருட்களை  கலக்கும்    அவலம்  அதிகரித்து  வருகிறது .

     முன்  காலங்களில்   ஒருநாள்   விற்பனையில்  மீதிவரும்  விற்கப்படாத  மீன்களை  அழித்துவிடும்  பழக்கத்தை  மீன்  வியாபாரிகள்  கடைபிடித்து  வந்தனர் .  ஆனால்  தற்போது  மீதிவரும்  மீன்களை  அமோனியா  கலக்கப்பட்டு  பாதுகாத்து  பல  நாட்கள்  விற்கப்படுகிறது .தடைகாலங்களில்   விற்பனை  செய்ய  மொத்த  வியாபாரிகள்  முன்கூட்டியே  இம்முறையில்  மீன்கள்  அதிக  அளவில்  பாதுகாத்து  வைக்கின்றனர் .சிலர்  அமோனியா  தூளும் ,  மாற்றுச்சிலர்  அமோனியா  கலக்கப்பட்ட  தண்ணீரை  ஐஸ்  கட்டைகளாக  மாற்றப்பட்டு  மீன்களை  பாதுகாக்கின்றனர் .

     நம்  அண்டை  மாநிலத்தில்  இடையிடையே  சோதனைகள்  நடத்தப்பட்டு  இதுபோன்ற  மீன்கள்  அழிக்கப்படுகின்றன. ஆனால்  நம்  மாவட்டத்தில்  உணவு  பாதுகாப்பு  அதிகாரிகளோ , சுகாதார  துறையினரே  அவலத்தை  கண்டுகொள்வதில்லை .இதனால்  சுகாதாரமற்ற  மீன்களை  சாப்பிடும்  பொதுமக்களுக்கு  நோய்கள்  உருவாகிறது .மிகவும்  ஆபத்தான  நிலைக்கு  நிலைமை  மாறிவரும்  உண்மையை  உணர்ந்து  சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்கவேண்டும் .இவ்வாறு  அவர்  கூறினார் .

    மழைக்காலம்  தொடரும்  நிலையில்  உணவு  பொருட்களில்  கலப்படம்  கூடுதல்  பாதிப்புகளை  ஏற்படுத்தும்  ஆகவே  சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  தகுந்த  நடவடிக்கை  எடுக்க  முன்வரவேண்டும்  என  பொதுமக்கள்  கோரிக்கை  வைக்கின்றனர் .மாவட்ட  நிர்வாகம்  முறையான  கண்காணிப்பிற்கும்   முன்வரவேண்டும்  என்பதே  சமூக  ஆர்வலர்கள்  கோரிக்கையாக  உள்ளது

Categories: NEWS
  1. 2,July, 2016 at 9:08 am

    Reblogged this on PesPro.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: