Home > DISTRICT-NEWS, Thiruvallur > திருவள்ளூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

1,July, 2016

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில் நேற்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுச்செல்வன், மோகனசுந்தரம், செல்வம், சுதாகர், விஜயன், கார்மேகம், ஜெயவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் திருவள்ளூர் பஜார் வீதி, ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, சத்யமூர்த்தி தெரு, பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் திருவள்ளூர் பகுதியில் 30–க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனையிட்டதில் அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இனிமேலும் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களை தீ வைத்து எரித்தனர்

Categories: DISTRICT-NEWS, Thiruvallur
%d bloggers like this: