Home > NEWS > மத்திய அரசு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

மத்திய அரசு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

25,July, 2016

மத்திய அரசு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

நெல்லை மாவட்ட நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தேவசேனாபதி தலைமை தாங்கினார்.

துணை தலைவர் காதர் முகைதீன், நெல்லை மாநகர தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் மண்டல அமைப்பு செயலாளர் நெல்லையப்பன் வரவேற்று பேசினார்.

மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ், வினியோகஸ்தர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். நெல்லை மாவட்ட வர்த்தக கழக தலைவர் ஆர்.கே.காளிதாஸ், மாநகர தலைவர் முருகேசன், செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர செயலாளர் விநாயகம் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

முதல்–அமைச்சருக்கு நன்றி

தமிழகத்தில் 6–வது முறையாக முதல்–அமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு இந்த கூட்டம் பாராட்டு தெரிவிக்கிறது. அன்னிய முதலீட்டுக்கு தொடர்ந்து தடை விதித்து வரும் முதல்–அமைச்சரை இந்த கூட்டம் பாராட்டுகிறது.

பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு கொடுக்கும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். வினியோகஸ்தர்களின் லாபத்தை மனதில் கொண்டு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

உணவு பாதுகாப்பு தர சட்டம்

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் வினியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். காலாவதியான மற்றும் பழுதான பொருட்களை பெரிய நிறுவனங்கள் திரும்ப பெற வேண்டும். வணிக கொள்கைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில், இணை செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் அருள் இளங்கோ, செல்வகுமார், மீரான், குணசேகரன், சாலமோன், ஸ்டீபன் பிரேம்குமார், மோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories: NEWS
  1. 25,July, 2016 at 11:36 am

    FBO s should look from consumer and food safety angle rather than business angle.

  2. 17,August, 2016 at 2:35 am

    
    Ya mejor renuncia, abordar realmente no es lo que mejor te sale.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: