Home > DISTRICT-NEWS, Krishnagiri > ஒகேனக்கலில் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

ஒகேனக்கலில் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

11,August, 2016

ஒகேனக்கல்: ஒகேனக்கலில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் குளிர்பான கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், இங்கு 30க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள், 50க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள உணவு விடுதிகளில், தரமான உணவுகள் வழங்கப்படாதது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிருந்தா தலைமையில் நேற்று வந்த அதிகாரிகள், அங்குள்ள உணவு விடுதிகள், குளிர்பான கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உணவு விடுதிகளில், உணவு பொருட்களில் கலக்கும் கலப்பட ரசாயன பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் உணவு விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri
%d bloggers like this: