Home > NEWS > சாலையோரம் உணவு தயாரிக்கும் உணவகங்களுக்கு அபராதம்: ஆரணி நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

சாலையோரம் உணவு தயாரிக்கும் உணவகங்களுக்கு அபராதம்: ஆரணி நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

16,August, 2016

ஆரணியில் உள்ள உணவகங்களில் சாலையோரம் அடுப்புகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உணவு தயாரித்தால் அபராதம் விதிக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆரணியில் சாலையோர அசைவ உணவகங்களில் கோழி, மீன் உணவுகளை தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் மிளகாய்த்தூள், மசாலாக்கள் சாலையில் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரின் கண்களில் பட்டு, தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வந்தன.

இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்ததின்பேரில், ஆரணி புதிய, பழைய பேருந்து நிலையம், மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பாபு, ரவி மற்றும் நகராட்சி ஆணையாளர் ரவி, சுகாதார அலுவலர் லட்சுமணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

அப்போது, சாலையோரமாக அடுப்புகளை வைத்து உணவு தயாரித்துக்கொண்டிருந்த உணவகங்களில் அவற்றை அப்புறப்படுத்தினர். மேலும், கடை உரிமையாளர்களிடம் இனி சாலையோரம் உணவு தயாரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையாளர் ரவி எச்சரிக்கை விடுத்தார்.

Categories: NEWS
  1. No comments yet.
  1. 16,August, 2016 at 3:34 pm
Comments are closed.
%d bloggers like this: