Home > NEWS > டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் குறைந்த அளவு BPA – சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம்

டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் குறைந்த அளவு BPA – சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம்

23,August, 2016

22-aug-canned-food-bpa-1

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் விற்கப்படும் டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில்bisphenol-A (BPA) ரசாயனம், வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தின் பாதுகாப்பு அளவிற்குள் இருப்பதாகச் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டின்களில் அடைக்கப்பட்ட 30 உணவு பொருட்களில் நடத்தப்பட்ட சோதனையில் அது தெரியவந்துள்ளது.

உலோக அரிப்பைத் தடுக்க, உணவு அடைக்கப்படும் டின்களில் BPA பயன்படுத்தப்படுகிறது.

அந்த ரசாயனத்தால் புற்று நோய், இதய நோய் ஏற்படும் ஆபத்துள்ளதால், அது டின்களில் உள்ள உணவுகளில் கலக்காமல் பார்த்துக்கொள்வதில் அதிக கவனம் தேவைப்படுகிறது.

சிங்கப்பூரில், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் கிலோவுக்கு 0.6mg வரை BPA சேர்ப்பது,ஏற்றுக்கொள்ளக்கூடியது.

டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்குவோர் அளவுடன் அவற்றை உட்கொள்ளவும் அப்பொருட்கள் உற்பத்தியான தேதியைக் கவனத்தில் கொள்ளவும் பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தியது.

நீண்ட நாட்களுக்கு முன் உற்பத்தியான உணவுப் பொருட்களில் BPA அளவு அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது என அது தெரிவித்தது.

பதப்படுத்தப்படாத உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் BPA பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் எனச் சங்கம் மேலும் தெரிவித்தது.

Categories: NEWS
%d bloggers like this: