Home > DISTRICT-NEWS, Virudhunagar > காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

24,August, 2016

விருதுநகர்: விருதுநகர் பழையபஸ் ஸ்டாண்ட் பகுதியில் உணவுபொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் காலாவதி, சுகாதாரமற்ற 50 ஆயிரம் ரூபாய் பொருட்கள் அழிக்கப்பட்டன.

உணவு பாதுகாப்பு அதிகாரி சாலோ டீ சான் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சுகாதார இன்ஸ்பெக்டர்கள் நேற்று விருதுநகர் பழையபஸ் ஸ்டாண்ட், புல்லலக்கோட்டை ரோடு, புளுகாணுாரணி ரோடு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். தேதி குறிப்பிடாத, காலாவதி குளிர்பானம், பிஸ்கட், தகுதியற்ற குடிநீர் பாட்டில்கள், திறந்தவெளியில் விற்கப்பட்ட உணவுபொருள் அகற்றப்பட்டன. ஓட்டல்களில் ஏற்கனவே தயாரித்து பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்த சிக்கன், மட்டன், புரோட்டா மாவு அழிக்கப்பட்டன.

சுகாதாரமற்ற உணவுபொருள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

சாலோ டீ சான் கூறுகையில், “காலாவதி பொருள், சுகாதாரமற்ற நிலையில் உணவுபொருள் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த வகை பொருட்கள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன,” என்றார்.

%d bloggers like this: