Home > NEWS > தரக் கட்டுப்பாடு! உள்ளாட்சி வினியோகிக்கும் குடிநீருக்கும் : உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மும்முரம்

தரக் கட்டுப்பாடு! உள்ளாட்சி வினியோகிக்கும் குடிநீருக்கும் : உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மும்முரம்

24,August, 2016

புதுடில்லி:நாடு முழுவதும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வாரியங்கள் மூலமாக, குழாய் மூலமாகவும், மற்ற வகை களிலும் வினியோகிக்கப்படும் குடி நீருக்கும், தரக் கட்டுப் பாட்டு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது; எப்.எஸ். எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாது காப்பு மற்றும் தர ஆணையம், இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக நகரப் பகுதிகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் வினியோகிக்கப் படுகிறது; இதுதவிர, லாரிகள் மூலமாகவும், மேல்நிலை தொட்டிகள் உட்பட பல்வேறு வகைகளில் தண்ணீர் வினியோகிக்கப் படுகிறது.இவ்வாறு வினியோகிக்கப்படும் குடிநீர் தரமானதாக இல்லை என்பதால்தான், மக்கள் பணம் கொடுத்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை வாங்குகின்றனர். 2015ம் ஆண்டு கணக்கின்படி, நாடு முழுவதும், 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.5 கோடி பாட்டில் தண்ணீர் விற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வாரியங்கள் மூலம் வினி யோகிக்கப் படும் குடிநீருக்கும் தர நிர்ணயம் செய்ய வேண்டும்’ என, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், இதற்கான பணியில் ஈடுபட்டுள் ளது. சந்தையில் விற்கப்படும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கான தரத்தை நிர்ணயம் செய்யும் இந்த ஆணையம், பாட்டில்களில் விற்கப்படும் குடிநீருக்கும் தர நிர்ணயம் செய்துள்ளது.
இது குறித்து, ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் கூறியதாவது:

தற்போது நாடு முழுவதும் உள்ள, 32 சதவீத வீடுகளுக்கு, குழாய் மூலம், சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும், 11.5 சதவீத வீடுகளுக்கு, சுத்திகரிக்கப்படாத குடிநீர் வினியோ கிக்கப்படுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகை யில், 31.16 சதவீதம் உள்ள நகர் பகுதிகளில், 62 சதவீத வீடுகளுக்கு,குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வாரியங்கள் மூலம் இந்த குடிநீர் வினியோகிக்கப் படுகிறது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்துக்கு ஏற்ப, குடிநீரை வினியோகிக்க, தர நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்டப் பணிகள் நடக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவை இவற்றின் கீழ் வருவதால், அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராயப்படுகிறது.
இது தொடர்பான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப் பட்டு, ஆணையத்துக்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, பிறகு நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாட்டில் குடிநீர் தரமானதா?

பாட்டில்களில் விற்கப்படும் குடிநீருக்கான தரத்தை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நிர்ணயித்துள்ளது.பி.ஐ.எஸ்., எனப்படும் இந்தியத் தர அமைப்பின் தரச் சான்றிதழுடன், இந்த ஆணை யத்திலு ம் பதிவு செய்யும் நிறுவனங்கள் தான், பாட்டில் குடிநீரை விற்பனை செய்ய முடியும்
.பாட்டில் குடிநீர் விற்பனை செய்வதற்காக, நாடு முழுவதும், 5,842 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில், 1,495 நிறுவனங்கள் மட்டுமே,பி.ஐ.எஸ்., மற்றும் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன. 4,347 நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., தரச் சான்றிதழ் மட்டுமே பெற்றுள்ளன.
அடுத்தது கோவில் பிரசாதம்:
உணவுப் பொருட்களுக்கான தரச் சான்றிதழ் அளிக்க மற்றும் கண்காணிக்க, நாடு முழுவதும், 100 இடங்களில் மையங்களை ஏற்படுத்த, ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, கோவில்களில் அளிக்கப்படும் பிரசாதங்களின் தரத்தையும் கண்காணிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

பீட்சா, பர்கருக்கு தடை? பள்ளிகளில் நடத்தப்படும்கேன்டீன்களில், பீட்சா, பர்கர், சிப்ஸ் மற்றும் செயற்கை குளிர்பானங்கள் விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கவும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.

மிக அவசியம்!

தரமற்ற குடிநீர்தான், 80 சதவீதம் நோய் பாதிப்புகளுக்கு காரணம்; எனவே, உலக சுகாதார நிறுவன அறிவுரைப்படி, உள்ளாட்சி கள் மூலம் வழங்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு, உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் ஆய்வு செய்யும் நடைமுறையை உருவாக்குவது, மிக அவசியம்.
-எம்.சோமசுந்தரம், தொடர்பு அலுவலர்,இந்திய நுகர்வோர் சங்கம்
ஆய்வக வசதி இல்லையே?
மத்திய அரசின் இந்த முயற்சி வரவேற்கத்தக் கது. மாநில அரசுகள் இவற்றை முறையாக செயல்படுத்த உரிய வழிமுறைகளை அறிவிக்க வேண்டும். உணவு பாதுகாப்புத் துறையினரிடம், இதற் கான ஆய்வக வசதிகள் போதுமான அளவில் இல்லை. நடைமுறையை செயல்படுத்தும் முன், தேவையான ஆய்வக வசதிகளை ஏற்படுத்தினால் மட்டுமே, இது சாத்தியம்.
-டி.சடகோபன், தலைவர், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம்

Categories: NEWS
%d bloggers like this: