Home > DISTRICT-NEWS, Nagapattinam > வேளாங்கண்ணியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

வேளாங்கண்ணியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

30,August, 2016

 

வேளாங்கண்ணியில் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, தரமான உணவுப் பொருள்களை வழங்கும் வகையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ந. தட்சிணாமூர்த்தி தலைமையில் இந்த ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. உணவு விடுதிகள், டீக்கடை, மளிகைக்கடை, மீன் மற்றும் ஆடு, கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள், சாலையோர உணவு விற்பனையகம் ஆகியவற்றில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும் உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுவதை சுத்தமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவதால் அவர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கத் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அத்துடன் தரமற்ற உணவு வகைகளை விற்பனை செய்வோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆய்வுப் பணியை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எம். ஆண்டனிபிரபு, ஏ.டி. அன்பழகன், வி. பாலகுரு, சி. கோதண்டபாணி, ஆர். மஹாராஜன், எஸ். சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

%d bloggers like this: