Home > NEWS > எண்ணெய் கலப்படம் புகார் எதிரொலி: உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

எண்ணெய் கலப்படம் புகார் எதிரொலி: உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

1,September, 2016

நாமகிரிப்பேட்டை: நாகிரிப்பேட்டை பகுதியில், எண்ணெய் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் நடப்பதாக வந்த புகாரையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைகிணறு பகுதியில், கடலை எண்ணெய், நல்லெண்ணையில் கலப்படம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறையினர் கடந்த ஜூலையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 74 டின்களில் இருந்த, 1,400 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், நாமகிரிப்பேட்டை பகுதியில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நியமன அதிகாரி டாக்டர் கவிக்குமார் தலைமையிலான குழுவினர், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பேக்கரி ஒன்றில், தின்பண்டங்கள், பன், முறுக்கு உள்ளிட்டவைகளில், தயாரிப்பு தேதி இல்லாதது தெரிந்தது. இதையடுத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்களை குப்பையில் கொட்டி அழித்தனர். மேலும், பேக்கரிக்குள் உபயோகப்படுத்தும் எண்ணெய் டின்களில் இருந்து, சோதனைக்கு அனுப்ப மாதிரி எடுத்துக்கொண்டனர். முன்னதாக, மெட்டாலா அருகேயுள்ள சேகோ பேக்டரியில், 25 ஜவ்வரிசி மூட்டைகளில் இருந்து மாதிரி எடுத்து, சோதனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கவிக்குமார் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள பேக்கரி, சிறுகடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், இரண்டு மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் நடந்தது. அப்போது, உணவு பொருட்களை எவ்வாறு விற்கவேண்டும் என்றும், அதற்கான கட்டுப்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை நடைமுறைப்படுத்த கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் பல கடைகளில் இதுபோல் விற்று வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: NEWS
  1. 23,September, 2016 at 8:13 pm

    Thanks for posting when you have got the opportunity,
    Guess I’ll just bookmark this website online.

  2. 26,September, 2016 at 3:50 am

    BIT = ticket untuk 1 journey sehala sahaja di sekitar
    bandar Rome berharga Euro 1.50. Ia boleh digunakan selama
    100min, bermaksud once dah naik pengangkutan awam (metro train, tram atau bas) tu kita leh duk lepak
    dalam tu selama tidak lebih 100min.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: