Home > NEWS > வேளாங்கண்ணியில் ஓட்டல், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

வேளாங்கண்ணியில் ஓட்டல், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

1,September, 2016

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழாவை முன்னிட்டு, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆண்டனிபிரபு, அன்பழகன், பாலகுரு, கோதண்டபாணி, மகாராஜன், சீனிவாசன் ஆகியோர் உணவு வணிக நிறுவனங்களில் ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டல்கள், டீக்கடை, மளிகை கடை, மீன், ஆடு, கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள், சாலையோர உணவு விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும் உணவு தயாரிப்பு, பரிமாறுதல் ஆகியவற்றில் சுத்தம் பேண வேண்டும் என்றும், தவறுவோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.  திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருவதால், அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க தகுந்த ஒத்துழைப்பு அளிக்கும்படி உணவு விற்பனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Categories: NEWS
%d bloggers like this: