Home > Chennai, DISTRICT-NEWS > 3 லாரிகளில் இருந்த ரூ.60 லட்சம் பான்மசாலா பொருட்கள் சிக்கியது

3 லாரிகளில் இருந்த ரூ.60 லட்சம் பான்மசாலா பொருட்கள் சிக்கியது

1,September, 2016

திருவொற்றியூர்,
திருவொற்றியூரில் 3 லாரிகளில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் சிக்கியது.
புகையிலை பொருட்கள்
திருவொற்றியூர் இந்திரா நகர் அருகே உள்ள ஒரு கன்டெய்னர் யார்டில் இருந்த 3 லாரிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலை பொருட்கள் எடுத்து செல்லப்படுவதாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சென்று பார்வையிட்டபோது லாரியில் இருந்த 3 டிரைவர்களும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் எந்தவித ஆவணங்களும் இன்றி நின்ற லாரியில் இருந்த பொருட்களை பிரித்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
ரூ.60 லட்சம் மதிப்பிலான…
அவை கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னர் லாரிகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக லாரியில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சமாகும்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பான்மசாலா பொருட்களை கொண்டு வந்தது யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர்களை தேடி வருகின்றனர். பிடிபட்ட போதை பொருட்கள் திருவொற்றியூர் உணவு பாதுகாப்பு அலுவலர் அருள் செல்வதாஸ் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories: Chennai, DISTRICT-NEWS
%d bloggers like this: