Home > DISTRICT-NEWS, Sivaganga > குளிர்பானத்தில் ரப்பர் வளையம், குப்பை வாலிபர் அதிர்ச்சி

குளிர்பானத்தில் ரப்பர் வளையம், குப்பை வாலிபர் அதிர்ச்சி

12,September, 2016

 

மானாமதுரை,

மானாமதுரை நகரில் 100–க்கும் மேற்பட்ட வர்த்தக கடைகள் உள்ளன. இதில் குளிர்பான கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் பிரபல நிறுவன தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிர்பானங்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் மானாமதுரை பகுதியில் உள்ள ஒரு கடையில் வாலிபர் ஒருவர் தனது தாகத்தை தணிப்பதற்காக குளிர்பானம் ஒன்று வாங்கி உள்ளார். ஆனால் அந்த குளிர்பான பாட்டிலின் உள்பகுதியில் குப்பை, தூசி கிடந்துள்ளது. அதே போல் இன்னொரு பாட்டிலை வாங்கி பார்த்த போது அதில் ஆண்கள் கையில் அணியும் ரப்பர் வளையம் கிடந்துள்ளது. மேலும் இந்த 2 பாட்டில்களிலும் காலாவதி குறிப்பில் அக்டோபர் மாதம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து குளிர்பானம் வாங்கிய அந்த நபர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மானாமதுரை பகுதியில் சமீபகாலமாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இது போன்ற கண்காணிப்பு பணியில் ஈடுபடாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga
  1. 14,September, 2016 at 9:32 am

    What action taken may also be posted .

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: